Friday 11 August 2023

                                                                  THE CONCEPT!




                                                      
                      கான்செப்ட்! என்றால், ஒரு எண்ணம், ஒரு யோசனை, ஒரு சிந்தனை, 
ஒரு கருத்து என்று பொருள்! நமக்குள் தோன்றும் பலவிதமான எண்ணங்களின் மீது,  நாம் கொண்டுள்ள நம்பிக்கை! 

நாம், யார் மீது அன்பு வைத்திருக்கின்றோமோ, அவர்களிடத்தில் நமக்குள் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தும் போது, நம்மீது அதிக அன்பு வைத்திருப்பவர்கள், நம்முடைய எண்ணங்களுக்கு உயர்ந்த மதிப்பளித்து, அந்த எண்ணங்களை பின்பற்ற துவங்குகின்றனர்! 

* எந்த கருத்துக்களை எதிர்ப்பது?
* எந்த கருத்துக்களை ஏற்பது?
* எந்த கருத்துக்களை பரிசீலிப்பது? 

என்ற முடிவை நாம் எடுப்பதற்கு, அந்த கருத்தை, அந்த எண்ணத்தை வெளிப்படுத்தியவர், நம்முடைய அன்பிற்குறியவரா? அவர் பெரும் செல்வந்தரா? அந்த எண்ணம், நம்முடைய எண்ணத்துடன் ஒத்துப்போகிறதா?  என்பதை  பொருத்து அமைகிறது! 

உதாரணத்திற்கு, பூமிதான், சூரியனை சுற்றிவருகிறது! என்ற தன் கருத்தை பதிவு செய்தவரை, கட்டிவைத்து எரித்தார்கள்! சிலகாலங்களுக்கு பிறகு, அவர் கூறியது சரிதான் என்று, தவறிழைத்த முன்னோர்களின் செயலுக்காக  வருந்துகிறோம்!

எங்க ஊரில்,  சட்டை போடாத ஒரு தாத்தா! இருந்தார். அவர் மாட்டுப்பால் குடித்தால் பாவம்! என்ற, தன் எண்ணத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு, நீண்ட காலமாக ஆட்டுப்பால் குடித்துவந்தார்! ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் "குப்புரக்கா" படுத்திருந்த போது, இல்லை! நான் ஆட்டுப்பால் குடித்ததும் பாவம்தான்! என்று, தான் முன் கூறிய கருத்திலிருந்து, பின்வாங்கிக்கொண்டார்! அதாவது, ஆட்டுப்பால் குடித்தால் பாவம் இல்லை! என்ற தன் கருத்திலிருந்து, தானே முரண்பட்டுப் போனார்!

அதாவது, சிகரெட் புகைத்தால் புற்றுநோய் வரும்! அதனால்தான், நான் பீடி புகைக்கிறேன்! என்பதுபோல் இருக்கிறது. இதில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் ஆட்டுக்கறி கோழிக்கறி சாப்பிட்டால் பாவம் இல்லை!  ஆனால், மாட்டுக்கறி சாப்பிட்டால் பாவம் என்பார்கள்!

நமக்கு, மற்றவர்களின் செயல்களை நம்பிக்கைகளை பார்த்தால் சிரிப்பு வருகிறது! மற்றவர்கள், நம்முடைய செயல்களை நம்பிக்கைகளை பார்த்து சிரிக்கின்றனர்! யாரும் யாரையும் பார்த்து, ஏலனமாக சிரிக்காமல் இருக்க, என்ன செய்யலாம்! அப்படி சிரிப்பதனால்தானே மனிதனுக்கு கோபம் வருகிறது! சக மனிதர்களோடு, நாம் அன்பும் மரியாதையுமாக எப்படி பழகுவது?  சமத்துவம்! சகோதரத்துவம்! பரஸ்பர நட்புடன் எப்படி அனைவரிடத்திலும் அன்பாக இருப்பது? என்ற இந்த விபரீத முயற்சியை நான் செய்ய துணிகிறேன்!  

இப்பொழுது, என்னுடைய  கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்! இதை யாரும் ஏற்கப்போவது இல்லை! ஏனேன்றால், யாருக்கும் நான் பெரிதான, அன்பிற்குறியவனும் அல்ல! நான் பெரும் செல்வந்தனும் அல்ல! நான் விரும்பியதைப் போல,  இவ்வுலகம் இருக்க வேண்டும்! நான் எவ்வாறு இவ்வுலகத்தை காண்கின்றேனோ, அதுபோலவே எல்லோரும் காணவேண்டும்!  என்ற எண்ணம், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது!

என்னுடைய நோக்கம் என்ன?  யார் மீதும் கோபம் கொள்ளாத, எல்லோரையும் நேசிக்கக்கூடிய, ஒரு சமுதாயத்தை  உருவாக்க நான் ஒரு சிறு முயற்சி செய்கிறேன்! அவ்வளவுதான்!

சரி இப்போது,
knowledge is virtue! உன் வாழ்க்கை உன் கையில்! வாய்மையே வெல்லும்! அறம் செய்ய விரும்பு! அகிம்சை!  கர்மா! பல்லி கத்துவது! பூனை குறுக்கே போவது! money plant வளர்ப்பது! வாஸ்து! ஜோதிடம்! ராசிகல்! கை காலில் கயிறு கட்டுவது! கண் திருஷ்டி பொம்மை வைப்பது! பேய் பிசாசு! பில்லி சூன்யம்! கிரகணத்தின் போது வெளியே போகாதே! திங்கள் பயணம் திரும்பாது! சனி பிணம் தனியே போகாது! மயில் தோகை குட்டி போடும்! என்னை பார்த்தால் யோகம் வரும்! (கழுதை படம்) குதிரை லாடம் குபேர லாபம்! குண்டம் இறங்குதல்! அழகு குத்துதல்! விரதம் இருப்பது! இறைவன் ஒருவனே, அவர் அல்லா! ஏசு உயிர்த்தெழுந்தார்! சிறுவன் தலையை சிவன் வெட்டினார், பிறகு ஒட்டினார்! பிரம்மா படைத்தார்! விஷ்ணு காக்கிறார்! சிவன் அழிப்பார்! .........................................................>>>

இதில் சில மூடநம்பிக்கை என்று நினைப்பவர்களும், இதில் எல்லாமே மூடநம்பிக்கைதான் என்று நினைப்பவர்களும், ஒரு பேப்பரை எடுத்து, அதில் உங்களுடைய தாய்தந்தை பெயர் மற்றும் உங்களுடைய பிறந்த தேதியை எழுதவும்!

அவர்கள்தான் உங்களுடைய தாய்தந்தை என்பதற்கும், அன்றுதான் நீங்கள் பிறந்தீர்கள் என்பதற்கும், உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது???

வேரொருவர் கூறியதை பின்பற்றி நடப்பது மூடநம்பிக்கை என்றால், உங்கள் தாய்தந்தை யார் என்பதையும் உங்களுக்கு வேரோருவர் தானே கூறினார்! அதைத்தானே இவ்வளவு காலம் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்! அப்படியானால் அதுவும் மூடநம்பிக்கைதானே??? 

நாம் எல்லோருமே, அவரவர் அன்பிற்குறியவர்கள் கூறுவதை ஏற்றுகொண்டு பின்பற்றி நடக்கிறோம், அவ்வளவுதானே! இதில் பிறரை பார்த்து சிரிப்பதற்கு, யாருக்கு தகுதி இருக்கிறது?

கருப்பு சட்டை, வெள்ளை சட்டை, காவி சட்டை, அழுக்கு சட்டை அணிந்திருப்பதால், யாரும் பகுத்தறிவாளர்களோ, விஞ்ஞானிகளோ, ஞானிகளோ, மூடர்களோ அல்ல! நாம் ஒருபோதும் யாருக்கும் மேலானவர்களும் அல்ல! கீழானவர்களும் அல்ல! நாம் எல்லோருமே எப்போதுமே சமம்தான்! நாம் எல்லோரும் எப்போதுமே மூடநம்பிக்கைவாதிகள்தான்!

இதற்கு நான், சில உதாரணங்கள் தருகிறேன்!

ஒரு முட்டையை எடுத்துக்கொள்வோமே! முட்டியின் வடிவம் என்ன? நீள்வட்டம், என்பது உண்மை! முட்டையின்  இன்னொரு வடிவம்,  வட்டம்!  என்பதும்  உண்மைதான்! அது எப்படி இரண்டு உண்மை இருக்கமுடியும்? அப்படி ஒரு பொருளுக்கு ஒன்ருக்கும் மேற்பட்ட வடிவங்கள் இருந்தால், அதை எப்படி அடையாளம் காண்பது?  

யாருக்காவது,  வட்டவடிவிலான ஒரு பொருளை பார்த்தால், அது முட்டையின் இன்னொரு வடிவம்! என்று ஞாபகத்திற்கு வருமா? வராது!
ஏனேன்றால், நம்முடைய சிறுவயது முதலே, நமக்கு எது கற்றுத்தறப்பட்டதோ, அதுவே நம் மனதில் ஆழப்பதிகின்ற எண்ணங்கள்! அதிலிருந்து நாம் மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிந்திப்பதோ, அல்லது அப்படி மாறுபட்ட கண்ணோட்டத்தில், சிந்திப்பவர்களின் கருத்தை  பரிசீலிப்பதோ  கடினம்! 

உதாரணம் 2

பிரமிடு! எடுத்துக்கொள்வோம்,
பிரமிடை நேரில் பார்க்கச் சென்ற சிலர், தங்கள் ஊருக்கு திரும்பியவுடன், அவர்களுடைய அன்பிற்குறியவர்களிடம், அவர்களுடைய சந்ததியினர்களிடம், தங்களுடைய அனுபவங்களை, கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்!

* ஒருவர் சொல்கிறார், நான்! ஒரு முக்கோணத்தை பார்த்தேன்! என்று,
* ஒருவர் சொல்கிறார், நான்! இரு முக்கோணங்களை பார்த்தேன்! என்று,
* ஒருவர் சொல்கிறார், அதன் உச்சியின் மீது எலி காப்டரில் பறந்த பொழுது, நான்! நான்கு முக்கோணங்களை பார்த்தேன்! என்று, 
* ஒருவர் சொல்கிறார், நான்! என் மனக்கண்ணால் பார்த்தேன்! அதனுடைய அஸ்திவாரம் ஒரு சதுரம்! என்று.

அந்த பிரமிடை நேரில் சென்று பார்க்காத  என் கண்களுக்கு, அது வட்டமாக தெரிகிறது! ஏனென்றால், நான்! பிரமிடின் உச்சியின் மீது, விமானத்தில் பயணித்ததும் இல்லை! விமானத்திலிருந்து பாராசூட் கட்டிக்கொண்டு குதித்ததும் இல்லை! அந்த பிரமிடின் உச்சியை மையமாக கொண்டு, நான் சுழன்றுகொண்டே கீழே வரவும் இல்லை! நான் படுத்திருந்ததோ, சுழல்கின்ற மின் விசிரிக்கு கீழே!

இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது! பிரமிடை நேரில் சென்று பார்த்து, பார்க்காத தங்களுடைய கருத்துக்களை பதிவுசெய்தவர்களின் சந்ததிகள், தங்களுடைய முன்னோர்களின் மீதுள்ள அன்பினால், மரியாதையினால், ஆழ்ந்த நம்பிக்கையினால் அவர்கள் விட்டுச்சென்ற கருத்துக்களை, எண்ணங்களை  உடையாமல் பாதுகாப்பதுடன், அதை அடுத்த தலைமுறைக்கு நகர்த்திச் செல்கின்றனர்!

இந்த ஒவ்வொரு சந்ததிகளும் வளர்ந்து பெருகி, அடுத்த சந்ததிகளின்
அருகில் சென்று வாழ நேரிடும்போது, என்னவாகிறது?

முட்டாபயல்கள்! ஒரு முக்கோணம்தான் இருக்காமாம், ஆனால் அங்கு இரண்டு முக்கோணம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்க மறுகிறார்கள்!அறிவுகெட்டவங்க! அங்கு நான்கு முக்கோணம் இருக்கிறது, என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்! ஏன் வீணா சண்டையிடுகிறீர்கள்? ஒன்றோ, இரண்டோ, நான்கோ அது அடிப்படையில் ஒரு சதுரம்! என்று எங்கள் முன்னோர்கள் ஞானதிருஷ்டியினால் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்! அதுவே உண்மை! என்று இந்த கருத்துகள், எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதுக்கொள்கின்றன. 

உண்மையில் இதில், முதல் உண்மை! கடைசி உண்மை! நடு உண்மை! சிரிய உண்மை! பெரிய உண்மை! பொய்யான உண்மை! உண்மையான உண்மை  சத்தியமான உண்மை! வெளியில் வராத உண்மை!  மறைக்கப்பட்ட உண்மை என்று எதாவது இருக்கிறதா?

பூமியை மையமாக கொண்டு, சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றிவருகின்றன என்பதும் உண்மைதான்! இங்கிருந்து பார்த்தால் இது உண்மை! அங்கிருந்து பார்த்தால் அது உண்மை! இங்கிருந்து கொண்டே, அங்கிருந்து பார்த்தால் அதுவும் உண்மைதான்!

ஒருவர் இங்கு நின்று பார்த்தால் 9 தெரிகிறது! ஒருவர் அங்கு நின்று பார்த்தால் 6 தெரிகிறது! அது 3D வடிவில் இருப்பதாக கற்பனை செய்து, நான் படுத்துக் கொண்டு பார்த்தேன், எனக்கு 1 தெரிந்தது! இதில்  உயர்ந்த சிந்தனை, தாழ்ந்த சிந்தனை என்று ஏதேனும் உண்டா???

முட்டையின் வடிவம், நீள்வட்டம் என்பது ஒரு உண்மை! அதன் இன்னொரு உண்மை, வட்ட வடிவம்! அப்படியானால், நீள்வட்டம் என்பது பொய்யா? நீள்வட்டம் என்பது பழைய உண்மையா? வட்ட வடிவம் என்பது புதிய உண்மையா? இந்த இரண்டு மட்டுமல்ல! இதற்கு மேலும் உண்மைகள் இருக்கலாம்! நாம் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்காதவரை, 
அதை நம்மால் உணரமுடிவதில்லை!

* உயிர், பிறப்பதும் இறப்பதும் உண்மைதான்!

* உயிர், பிறந்தால்தானே அது இறப்பதற்கு! என்பதும்  உண்மைதான்!

* பிரபஞ்சம் தோன்றியது, அது அழியப்போகிறது என்பதும் உண்மைதான்!

* பிரபஞ்சம் தோன்றினால்தானே அழிவதற்கு! அது தொடர் மாற்றங்களுக்கு
உட்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது, என்பதும் உண்மைதான்!

* கடவுள் இருப்பதும் உண்மைதான்!

* கடவுள் இல்லை! என்பதும் உண்மைதான்!

காலம் காலமாக, நமக்குத் தெரிந்த உண்மைகளுக்கே நாம் உயர்ந்த மதிப்பளிக்கின்றோம்! "உண்மையை தவிர வேரொன்றும் இல்லை!" எல்லாமே உண்மைதான்!  என்பதை உணரும் பொழுது, எதைப் பார்த்தாலும்  சிரிப்பு வருவதில்லை!
 
அவரவர் எண்ணங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களுக்கு உயர்வானதே! நான் மீண்டும் கூறுகிறேன், நாம் எல்லோருமே அவரவர் அன்பிற்குறியவர்கள் கூறுவதை ஏற்றுகொண்டு பின்பற்றி நடக்கின்றோம்! அவ்வளவுதானே! இதில் பிறரை பார்த்து சிரிப்பதற்கு யாருக்கு தகுதி இருக்கிறது??? 

நீங்கள் பிறர் நம்பிக்கைகளைப் பார்த்து சிரிக்க ஆசைப்பட்டால், அதற்கு முதலில்,  நீங்கள் உங்கள் தாய்தந்தை பெயரை தெரிந்திருக்க வேண்டும்!

உங்கள் நம்பிக்கை, செயல்களை பார்த்து பிறர் சிரித்தால், அப்படி சிரிப்பவர்களிடம் கேளுங்கள், அவர்களுடைய தாய்தந்தை பெயர் என்ன? என்று!

நான்! யாரை எதுவென்று கூறுகின்றேனோ, அதுவாகவே நான் ஆகின்றேன்!

                                             அஹம் பிரம்மாஸ்மி!

                                                                நன்றி!

தாயே பராசக்தி! 2013 www.ramukavis1983.blogspot.in
லூசாப்பா, நீ? 2017 www.lusappani.blogspot.in
இப்பொழுது! 2020 www.eppoluthu.blogspot.in

ப. சிவக்குமார்
what's app +91 9790600183 
ramukavis1983@gmail.com

137, குப்புசாமி நகர்,
சின்னவேடம்பட்டி,
கோயமுத்தூர் – 641049.




                                                                  THE CONCEPT!                                                              ...